மாற்றுத்திறனாளிகள் மனஅமைதிக்கு சிலம்பம் கற்றுத்தரும் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுக்கள் குவிகிறது.

மதுரை மாவட்டம் பேரையூரில் ஈஸ்வரன் தலைமையில் அதே ஊரைச் சேர்ந்த விக்னேஷ் மதன்குமார் செந்தில் தினேஷ் மாதவி உள்ளிட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் சிலம்பம் பயின்று வருகின்றனர்.இவர்கள் தஙகள் ஊரின் அருகிலுள்ள காடனேரி கிராமத்திலுள்ள அன்னை இல்லத்திலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தினமும் காலையில் சிலம்பம் கற்றுத்தருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

சாதாரண மனிதர்களை விட மாற்றுத்திறனாளிகள் படும் சிரமங்கள் அதிகமென்றும் அதை வெளிக்காட்ட முடியாமல் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களின் மனஅழுத்தத்தை போக்கும் வகையில் மனஅமைதிக்காக சிலம்பம் கற்றுத் தருவதாகவும் தங்களுடன் இணைந்து இவர்கள் சிலம்பம் சுற்றும் போது மனஇறுக்கம் குறைந்து சிறு குழந்தையைப் போல் விளையாடி சிரித்து மகிழ்வதாகவும் இதற்காக வாரம் ஒரு முறை அன்னை இல்லத்திற்கு வந்து சிலம்பம் கற்றுத்தருவதாக பள்ளி மாணவர்கள் தெரிவித்தனர்.மாற்றுத்திறனாளிகள் மனஇறுக்கத்தை சிலம்பம் பயிற்சி மூலம் போக்கும் பள்ளி மாணவர்களை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்

உசிலை சிந்தனியா