நெல்லையில் தமுமுக மமக நிர்வாகக்குழு கூட்டம்..

நெல்லையில் தமுமுக மமக நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தீவிர உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி நகர தமுமுக மமக நிர்வாகக்குழு கூட்டம் ஒன்றிய தலைவர் M.சேக் முகைதீன் தலைமையில் நடைபெற்றது. 19.10.21 செவ்வாய் கிழமை நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் K.S.ரசூல்மைதீன்‌, மாவட்ட துணை தலைவர் தேயிலை மைதீன், ஆகியோர் பங்கேற்று முக்கிய ஆலோசனைகள் வழங்கினர். இளைஞர் அணி மாநில துணை செயலாளர் ரியாசூர் ரஹ்மான், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் யூசுப் சுல்தான், தொண்டர் அணி மாவட்ட செயலாளர் சம்சுதீன், இளைஞர் அணி ‌மாவட்ட துணை செயலாளர் புரோஸ்கான், சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

மேலப்பாளையம் தெற்கு பகுதி செயலாளர் சேக்மதார், முகம்மது தாசின் ஆகியோரும் உடன் பங்கேற்றனர். சேரன்மகாதேவி நகர தலைவர் S.ஷஹீத் பாதுஷா, தமுமுக நகர செயலாளர் S.சேக் செய்யது அலி, மமக நகர செயலாளர் A.அமீர் சுல்தான், தமுமுக &மமக நகர பொருளாளர் M.அப்துல்காதர், தமுமுக&மமக நகர துணை தலைவர் P.ஜாகீர் உசேன், தமுமுக நகர துணை செயலாளர்கள் பாசித் ராஜா, S.தாவூத் இப்ராஹீம், A.முகம்மது அஸ்கர், மமக நகர துணை செயலாளர்கள் P.அப்துல்ஹமீது, அக்பர், சேக் செய்யது அலி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அமைப்பு தேர்தல் வருவதை முன்னிட்டு தீவிர உறுப்பினர் சேர்க்கை நடத்துவது, மேலும் செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டு, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ‌நகர தலைவர் ஷஹீத் பாதுஷா நன்றி கூறினார்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்