அரசு நிர்வாக சீர்கேடினால் எய்ம்ஸ் வர தமாதம்.விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் பேட்டி.

அதிமுகவை பொறுத்தவரையில் ஜெயலலிதா கொள்ளை அடித்ததை விட முன்னாள் அதிமுக அமைச்சர்கள் கொள்ளையடித்தது அதிகம்.அதிமுக அரசு நிர்வாக சீர்கேடினால்எய்ம்ஸ் வர தமாதம்விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் பேட்டி..சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு. அப்போது அவர் கூறியதாவது.-எய்ம்ஸ் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறியது குறித்த கேள்விக்கு-முன்னாள் அதிமுக அரசு உட்கட்டமைப்பினை சீர் செய்யாத காரணத்தால் இன்று எய்ம்ஸ் தாமதமாகி உள்ளது .இந்த நிலையில் முன்னாள் அமைச்சர்கள் பொறுப்பற்ற விதத்தில் கோரிக்கை வைப்பது நியாயமற்றது.-Zomato நிறுவனம் ஊழியர் ஹிந்தி தேசிய மொழி என்று பேசிய சர்ச்சை குறித்த கேள்விக்கு-இது ஹிந்தி மொழி ஆதிக்கம் உள்ளவர்களின் ஆதிக்க சக்தியை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது.மோடி அரசு ஆட்சிப் பொறுப்பினை ஏற்ற பிறகுதான் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுகிறது.ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மாநிலத்தின் மொழியை அழிப்பதில் அவர்கள் குறியாக உள்ளார்கள்.இதன் வெளிப்பாடாக ஹிந்தி தெரிந்தவர்கள் அவர்களது ஆதிக்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.-பொய் வழக்கு போட்டு அதிமுகவை முடக்க நினைக்கின்றனர் என்று ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் கூறியது குறித்த கேள்விக்கு-2011இல் அமைச்சராக பொறுப்பேற்ற விஜயபாஸ்கரின் சொத்து மதிப்பு 2021ல் எவ்வளவு? 10 வருடத்தில் 55 கோடி ரூபாய்க்கு ஒயிட் மணியாக சொத்துக்கள் வாங்கியது எப்படி? ஆகவே இது பொய் வழக்கு என்பதை உரிய ஆவணங்களுடன் நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும். அதிமுகவினரை பொறுத்தவரையில் ஜெயலலிதா கொள்ளை அடித்ததை விட முன்னாள் அதிமுக அமைச்சர்கள் கொள்ளையடித்தது அதிகம். தமிழகத்தை சூறையாடி 5 லட்சம் கோடி ரூபாய் கடனில் விட்டு சென்றுள்ளார்கள்.இவர்களது சொத்து மதிப்புகள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளது தமிழக முதல்வரின் இந்த தைரியமான முயற்சி பாராட்டிற்குரியது என்றார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்