கொடைரோட்டில் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி போலீசார் மோட்டார் சைக்கிள் பேரணி மேளதாளம் முழங்க வரவேற்பு.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள கொடைரோட்டில் சுதந்திர இந்தியாவில் தனது அயராத உழைப்பின் காரணமாக முழு தேசமாக ஒருங்கிணைத்தது முதல் இந்தியாவின் இரும்பு மனிதர் என பாராட்டப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினத்தை முன்னிட்டு அக்டோபர் 31-ம் தேதி தேசிய ஒற்றுமை தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை வலியுறுத்தி இவ்வாண்டு மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் தேசிய ஒற்றுமை தினத்தை கொண்டாடும் விதமாக நாட்டின் 4 திசைகளும் அமைந்துள்ள ஜம்மு காஷ்மீர் தமிழ்நாடு குஜராத் மற்றும் திரிபுரா மாநிலங்களில் போலீஸ் துறை சார்பாக மோட்டார் சைக்கிள் பேரணி ஆரம்பிக்கப்பட்டு குஜராத் மாநிலத்தின் கயா மாவட்டத்தில் நர்மதா நதிக்கரையில் அமைந்துள்ள ஒற்றுமையின் சிலை என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் திருவுருவ சிலையை சென்றடைய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழக காவல் துறை தமிழ்நாடு சிறப்பு காவல் படை துணை தளவாய் குமார் தலைமையில் 25 மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரியில் உள்ள  மகாத்மா காந்தி நினைவு மண்டபத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு திண்டுக்கல், ஓசூர், சித்ரதுர்கா, கபூர் பூனை, தானே , சூரத், நர்மதா வழியாக 2085 கிலோ மீட்டர் தூரத்தை 10 நாட்களில் கடந்து 24. 10 . 2021 அன்று ஒற்றுமையின் சிலை இனி அடைகிறார்கள் மேலும் 31. 10. 2021 அன்று நடைபெறவுள்ள தேசிய ஒற்றுமை தின விழாவில் பங்கேற்கிறார்கள் இதற்கு திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சீனிவாசன் தலைமையில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நிலக்கோட்டை போலீஸ் சூப்பிரண்ட் சுகுமாரன் வரவேற்றுப் பேசினார். இப்பேரணியில் கன்னியாகுமரியில் இருந்து வந்த 42 தமிழ்நாடு   போலீசார் சார்பில் வரவேற்பு  பரிசுகளையும் வழங்கி சிறப்புரையாற்றி ஊக்கம் அளித்தனர். இந்நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி சப் இன்ஸ்பெக்டர் பால முத்தையாமற்றும் போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

புனித ரமலான் வாழ்த்துக்கள்..