காட்பாடியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு .

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை விழிப்புணர்வு வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுத்தப்பட்டது.வாகன ஓட்டிகள் முக கவசம், தலைக்கவசம்அணிவது குறித்தும் விழிப்புணர்வை உதவி ஆய்வாளர் வெங்கடேசன் அறிவுரை வழங்கினார்.சாக்லெட், மாஸ்க் ஆகியவை இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டது.காட்பாடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் ராஜேந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மேகநாதன், தெய்வசிகாமணி, ரவி, சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளர்கள் ஏழுமலை, பரமசிவம் ஆகியோர் கலந்துகொண்டனர்