திருமங்கலம் அருகே புதூரில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி சாக்கடையில் நாற்று நட்டு பொதுமக்கள் எதிர்ப்பு.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே, உள்ள எட்டுநாளி புதூர் கிராமத்தில் சாக்கடை வசதி இல்லாததால், தற்போது ,பெய்து வரும் தொடர் மழையின் தண்ணீர் தேங்கி கழிவு நீராக மாறி நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மேலும் ,இதுகுறித்து அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவரிடம் பலமுறை மனு அளித்தும் , எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாகவும்.இதனால், அப்பகுதியில் வாழும் பொதுமக்களுக்கு நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
எனவே ,அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அப்பகுதி மக்கள் சாக்கடை நீரில் நாற்று நட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal

Be the first to comment

Leave a Reply