Home செய்திகள் வேலம்மாள் ஐடா ஹாலில் 2021ம் ஆண்டிற்கான ஆரோக்கிய குழந்தை வளர்ப்புக்கான போட்டி நடைபெற்றது.

வேலம்மாள் ஐடா ஹாலில் 2021ம் ஆண்டிற்கான ஆரோக்கிய குழந்தை வளர்ப்புக்கான போட்டி நடைபெற்றது.

by mohan

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சிந்தாமணி அருகே உள்ள வேலம்மாள் ஐடா ஹாலில் 2021ம் ஆண்டிற்கான ஆரோக்கிய குழந்தை வளர்ப்பு போட்டி நடைபெற்றது.இதில் 2018 முதல் 2021 ம் ஆண்டு வரை வேலம்மாள் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கான ஆரோக்கிய குழந்தை வளர்ப்பு போட்டி நடைபெற்றது.ஆரோக்கிய குழந்தைகளுக்கான போட்டியினை வேலம்மாள் நிறுவனர் முத்துராமலிங்கம் துவக்கிவைத்தார்.குழந்தைகள் நல மருதுவ துறை தலைவர் Dr. மாதேவன். தலைமை வகித்தார் Dr.ஜெயபாலஜி வரவேற்புரை கூறினார்பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கான ஆலோசகைளை Dr.சித்ரா, Dr.நடராஜரத்தினம் வழங்கினர்.இதில் 2018 ஆண்டு முதல் 2021ம் வரை கடந்த மூன்று ஆண்டுகளில் வேலம்மாள் மருத்துவமனையில பிறந்த குழந்தைகள் 250 பேர் கலந்துகொண்டனர்.கர்ப்பகாலத்தில் கருவுற்ற குழந்தையை பராமரிக்கும் முறை, பிரசவத்திற்கு பின் பிறக்கும் குழந்தைகளை பராமரிக்கும் முறை மற்றும் குழந்தைகளுக்கான உணவு தாய்ப்பால், காய்கறிகள் . பழங்கள் ,சத்தான உணவுகள் ஆகியவை வழங்கும் முறையும் அவை எவ்வாறு எவ்வளவு வழங்க வேண்டும் என்ற செய்முறையை மருத்துவர்கள் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தினர்.3 பிரிவுகளில் நடைபெற்ற ஆரோக்கிய குழந்தை போட்டியில் 47 குழந்தைகளுக்கு ரூபாய் 3 லட்சம் வழங்கப்பட்டது.சான்றிதழ் மற்றும். பரிசுகளை சிறப்பு விருந்தினர் கார்த்திக் வழங்கினார்.மேலும் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுவது தினால் ஏற்படும் பாதிப்புகள்.பிறந்த குழந்தைக்கு ஒவ்வொரு பருவ நிலையிலும் அதன் பரிமாண வளர்ச்சிக்கு ஏற்ப உணவு விகிதங்கள் ஆகியவை பெற்றோர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.சிந்தாமணி பகுதியை சேர்ந்த சீதா என்பவர் குறிப்பிடுகையில் டாக்டர் முத்துலட்சுமி காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவமனையில் குழந்தை பேறுக்காக அனுமதிக்கப்பட்டேன் அங்கு எனக்கு இலவச பிரசவம் மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி மற்றும் மாதாந்திர பரிசோதனைகள் ஆகியவற்றை சிறப்பாக செய்தனர் மேலும் குழந்தைகளின் 10 மாதத்திற்கு தேவையான தடுப்பு ஊசிகள் ஆலோசனைகளை மருத்துவர்கள் வழங்கினர் எனக் குறிப்பிட்டார்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!