Home செய்திகள் தரமற்ற முறையில் உணவு தயாரிக்கும் ஓட்டல் – உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை.

தரமற்ற முறையில் உணவு தயாரிக்கும் ஓட்டல் – உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை.

by mohan

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த முறையாறு பகுதியில் பழனி ஓட்டல் செயல்பட்டு வருகின்றது இதில் தரமற்ற உணவுகள் மற்றும் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் காலை உணவு மற்றும் மதிய உணவு தயார் செய்து விற்பனை செய்து வருவதாக குற்றசாட்டு எழுத்துள்ளதுதிருவண்ணாமலை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமைப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டுள்ள உணவகத்தில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்கள் இன்றியும் உணவகம் கழிவு நீர் செல்லும் ஓடை அருகே இருந்து வருவதால் உணவகம் முழுவதும் துர்நாற்றம் வீசி உணவு உண்பவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்உணவு பொருட்களை தரமாகவும் சமைக்க வேண்டும் என்ற விதிகளை மதிக்காமல் தரமற்ற முறையில் உணவு தயார் செய்யும் ஓட்டல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்கடந்த மாதம் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 5 ஸ்டார் உணவகத்தில் அசைவ உணவு சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் நடைபெற்றுள்ள நிலையில் செங்கம் முறையாறு பகுதியில் உள்ள ஓட்டலில் உணவு சாப்பிட்டு அப்பாவி ஏழை மக்களுக்கு எவ்வித அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பே அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் மேலும்உணவு வணிகர்கள் அனைவரும் உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழை கட்டாயம் பெறவேண்டும் இந்த நிலையில் உரிமம் இல்லாமல் தரமற்ற உணவு தயாரிக்கும் ஹோட்டல்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!