Home செய்திகள் மதுரை அட்சய பாத்திரம் 150 வது நாள் விழா.

மதுரை அட்சய பாத்திரம் 150 வது நாள் விழா.

by mohan

 கொரோனா பரவலை தொடர்ந்து, ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மதுரை மாநாகரில் சாலை ஓரங்களில் வசித்தவர்கள் பலர் உணவு இன்றி சிரமம் அடைந்தனர்.அவர்களுக்கு, உணவு அளிக்கும் வகையில் மதுரையின்அட்சய பாத்திரம் டிரஸ்ட் சார்பில் இயலாதவர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது.நேற்றுடன் 149 நாள் நிறைவடைந்து,150 வது நாளில் அடியெடுத்து வைத்தது. இதனைத் தொடர்ந்து,மதுரை அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக வந்தவர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் அட்சய பாத்திரம் டிரஸ்ட் சார்பில் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பிரபல திரைப்பட நடிகர் பயில்வான் ரங்கநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசும் போது, தானத்தில் சிறந்தது அன்னதானம். அதுபோல் தற்போது கொரானா மூன்றாம் அலை பரவி வருவதால் பொது மக்கள் எல்லோரும் இரண்டு தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு புகைப்பழக்கம் மதுப்பழக்கம் உள்ளிட்டவர்களை தவிர்த்துவிட வேண்டும்மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் டாக்டர் ரத்தினவேல் தலைமை வகித்தார்.ரோட்டரி மாவட்ட 3000 முன்னாள் ஆளுநர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார்.உதவி ஆளுநர் கார்மேகம் வாழ்த்துரை வழங்கினார்.கிழக்கு ரோட்டரி சங்க செயலாளர் ஜெகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவின்ஏற்பாடுகளை, மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் சேர்மன் நெல்லை பாலு செய்திருந்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!