Home செய்திகள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் வேண்டுகோள்.

தாங்கள் வசிக்கும் பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் வேண்டுகோள்.

by mohan

மதுரை தாங்கள் வசிக்கும் பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுரை போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா விடுத்துள்ள வேண்டுகோள் அறிவிப்பில் கூறியிருப்பதாவது. மதுரையில் பல்வேறு காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற 19 செயின் பறிப்பு குற்றங்களில் 15 வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 11 லட்சம் மதிப்புள்ள முப்பத்தி ஒரு பவுன் தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டு குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கரிமேடு மற்றும் சுப்பிரமணியபுரம் காவல் நிலைய பகுதியில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட நாகேந்திரன் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் சம்பவம் நடந்த சில தினங்களிலேயே கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள் மீட்கப்பட்டன. அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். திரு நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் சென்று செயின் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளி ரமேஷ் எந்த சிங்கத்தேவன் இருவரும் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து வழிப்பறி செய்யப்பட்ட தங்க நகைகள் மீட்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.அவனியாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நான்கு இடங்களில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட ஆகாஷ் மற்றும் அபினேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து தங்க நகைகள் மீட்கப்பட்டன .செம்பூரணியில் வழிப்பறியில் ஈடுபட்ட ஹரிஹரன்மற்றும் சபரி ஆகியோர் மதிச்சிய மத்திய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வைத்து ஆயுதம் தாங்கிய காவலர்களால் வாகன தணிக்கையின் போது கைதுசெய்யப்பட்டனர்‌ மேலும் அவர்கள் வழிப்பறியில் ஈடுபட்ட தங்க நகைகள் கைப்பற்றப்பட்டு அவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர் .அண்ணாநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட ராஜசேகரன், ஆனந்தகுமார், வீரபாண்டி ஆகியோரும் விரைந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் . மதிச்சியம்காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த பெண்ணிடம் நகை வழிப்பறி செய்த பூங்கொடி, நந்தினி ஆகிய பெண் குற்றவாளிகள் சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே கைது செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். மேற்படி குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட எதிரிகளை அடையாளம் விரைந்து நடவடிக்கை எடுக்க சிசிடிவி கேமராக்களில் பதிவு களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. எனவே பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் குற்றங்களை தடுக்கவும் , பாதுகாப்பு கருதியும் சிசிடிவி கேமராக்களை பொருத்த முன்வர வேண்டும். இவ்வாறு அந்த வேண்டுகோள் அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!