பாலாற்று வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன அண்ணன், தம்பி.

வேலூர் மாவட்டம் காட்பாடி விருதம்பட்டு டி.கே.புரம் காளி அம்மன் கோவில்தெருவை சேர்ந்தவர் பாபு கூலி தொழிலாளி. இவரது மகன்கள் முபாரக்(18) ஜாகீர் (17). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு அந்த பகுதியில் உள்ள பாலாற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்றனர்.அப்போது பரலாற்றில் ஆழமான பகுதியில் சென்ற இருவரும் நீரில் அடித்து செல்லப்பட்டனர்.தீயணைப்பு துறையினர் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டனர். அவர்களுடன் காட்பாடி தீயணைப்பு துறையினர் இணைந்து 2 பேரையும் தேடும் பணியில் ஈடுப்பட்டனர்.இதில் 2 பேரும் குளித்த இடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் நேற்று மாலை பிணமாக மீட்கப்பட்டனர்.30 மணிநேர தேடுதலுக்கு பின்பு இருவரின் உடல்கள் மீட்கப்பட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal