Home செய்திகள் சின்னகீசகுப்பம் பாறையில் அருள்பாலிக்கும் அனந்தசயன அரங்கநாதர்பக்தர்கள் பரவசம்.

சின்னகீசகுப்பம் பாறையில் அருள்பாலிக்கும் அனந்தசயன அரங்கநாதர்பக்தர்கள் பரவசம்.

by mohan

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா மேல்பாடி அடுத்த சின்னகீசகுப்பம் அருகில் உள்ள இயற்கையாக அமைந்த ஒரு பெரிய பாறையில் சயனகோலத்தில் சிற்பமாக காட்சி தரும் அரங்கநாதர் சமீபத்தில் பக்தர்களுக்கு சமீபத்தில் காட்சி தர தன்னை வெளிப்படுத்தி உள்ளார்.எத்தனையோ ஆண்டுகளாக புதர்மறைவில் காணப்பட்ட இந்த சிற்பம.தற்போது அவற்றையெல்லாம் அகற்றி, சுத்தமாக்கி வழிப்பட ஆரம்பித்து உள்ளனர் இந்த கிராம மக்கள்.மேல்பாடிகால்நடை மருத்துவமனையை கடந்தபின்பு ஒரு ஒற்றையடி பாதையில் ஒரு பர்லாங் தொலைவில் கடந்த பின்ப வயல்வெளி பகுதியில் அமைந்துள்ளது.ஒரு சிறிய குன்று இதன் பின்புறம் சமீபத்தில் அமைக்கப்பட்ட ஓலை பந்தலின் நிழலில் பாறையில் அமைந்துள்ளார் சயன அரங்கநாதர்.5 தலை ஆதிசேஷனின் அரவரணையில் சயாதிருக்கோலத்தில் அந்த பாறையை முழுமையாக ஆக்கிரமித்துக்கொண்டு சுமார் 7 அடி அளவில் 4 திருக்கரங்களுடன் ஒரு கை, தலை தாங்க மற்றொரு கரத்தில் மணிமாலையும் மற்ற இரு கரங்களும் முழுங்கால்வரை நீண்டுள்ளது.அகன்ற மார்பில் முத்தாரம், வனமாலைகள் புரள்கின்றன. தலையில் பெரிய கிரீடமும், தலைஅருகே சக்கரமும், இடது கரம் அருகே சங்கும், கணுக்கால் அருகே கதாயுதமும் அமைந்துள்ளது.தலைஅருகே ஆனைமுகன், ஸ்ரீதேவியும் வயிற்று பகுதிமேல் 3 முகங்களுடன் பிரம்மாவும், வலதுகால் பாதத்தின் அருகே பூதேவி சமேதராக கைகாப்பு இல்லாமல் பெருமாள் நிஜமாகவே சயனித்திருப்பதுபோல் காட்சியளிக்கிறார்.இப்போது தொட்டு தரிசிக்கும் அளவில் உள்ள அரங்கன் விரைவில் எட்டி பார்த்து தரிசிக்கும் அளவுக்கு முன்புறம் ஆலையம் அமையும் அளவிற்கு பக்தர்கள் வரத்துவங்கி உள்ளனர்.குறிப்பு:வேலூர் மாவட்டம் வேலூர், காட்பாடியிருந்து திருவலம் வழியாக இந்த இடம் திருவலத்திலிருந்து சுமார் 9 கி.மீ தொலைவிலும் ராணிப்பேட்டை மாவட்டத்திலிருந்து ராணிப்பேட்டை, சிப்காட் வழியாக திருவலம் வழியாக இந்த இடத்திற்கு வரலாம். இதன் அருகில்தான் முருகனின் சிறப்புமிக்க வள்ளிமலை (குடகுவரை )ஸ்ரீ சுப்பிரமணி திருக்கோவில் உள்ளது.

கே.எம். வாரியார் வேலூர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!