சீமானுத்து கிராமத்தின் பொதுமக்களின் 27 வருட கோரிக்கையை நிறைவேற்றிய ஊராட்சி மன்ற தலைவர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானுத்து கிராமத்தில் 27 வருடமாக நியாய விலை கடை இல்லாமல் தமிழக அரசால் வழங்கப்படும் அரிசி, பருப்பு ,சீனி, உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு மூன்று கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டிய சிரமம் இருப்பதாகவும் உடனடியாக சீமானுத்து கிராமத்தில் ஒரு நியாய விலை கடை திரந்து கொடுக்க வேண்டும் என சீமானுத்து ஊராட்சி மன்ற தலைவர் அஜித் பாண்டியிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர், இந்த கோரிக்கையை ஏற்ற ஊராட்சி மன்ற தலைவர் உடனடியாக தமிழக அரசிடம் எடுத்துக்கூறி நியாய விலை கடை கொண்டுவருவதற்கு முழு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார், இதனையடுத்து இன்று சீமானூத்து, கல்லூத்து, பெருமாள்பட்டி, கோவில்பட்டி ஆகிய பகுதிகளுக்கு நியாய விலை கடையை இன்று சீமானுத்து ஊராட்சி மன்ற தலைவர் அஜித்பாண்டி திறந்து வைத்தார், பொதுமக்களின் இருபத்தி ஏழு வருட கனவை நனவாக்கிய சீமானுக்கு ஊராட்சி மன்ற தலைவர் அஜித் பாண்டிக்கு பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவித்தனர்.

உசிலை சிந்தனியா

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal