உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டியில் புதிதாக அங்கன்வாடி கட்டிடத்தை ஒன்றிய கவுன்சிலர் திறந்துவைத்தார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாப்பட்டியில் அங்கன்வாடி மையம் இடியும் நிலையில் இருந்த நிலையில் அதை சரி செய்து புதிதாக கட்டிடம் அமைத்து தரும்படி ஒன்றிய கவுன்சிலர் வீரலட்சுமி செந்தில்குமார் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது, இதனை அடுத்து அந்த பழைய அங்கன்வாடி கட்டிடத்தை இடித்து புதிதாக அங்கன்வாடி மையம் கட்டிடத்தை கட்டி முடிக்கப்பட்ட நிலையில், இன்று செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய இரண்டாவது வார்டு அதிமுக ஒன்றிய கவுன்சிலர் வீரலட்சுமி செந்தில்குமார் நேரில் சென்று ரிப்பன் வெட்டி அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தனர்.

உசிலை சிந்தனியா