நாய் கடி அச்சத்தில் அரசு மருத்துவமனை நோயாளிகள் நடவடிக்கை எடுக்க மாநகராட்சிக்கு கோரிக்கை.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு புதிய கட்டிடத்தில் சுற்றி சுமார் 50க்கும் மேற்பட்ட வெறி நாய்கள் தெரிவதால் உள் நோயாளிகள் நோயாளிகளில் உதவியாளர்கள் 108 அவசரகால ஓட்டுனர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆகியோரை வெறிநாய்கள் தொடர்ந்து கடித்து வருவதாக புகார் எழுந்துள்ளது இன்று காலை 108 அவசர கால ஊர்தி ஓட்டுநர் மாரிசாமி என்பவர் பைபாஸ் சாலையில் விபத்து ஏற்பட்டது என தொலைபேசி அழைப்பு வந்துள்ளது உடனடியாக கிளம்ப வேண்டும் என ஆம்புலன்சை இயக்குவதற்காக கிளம்பியுள்ளார் அப்பொழுது அவரை சுற்றிய வெறிநாய்கள் காலில் கடித்துவிட்டு ஓடிவிட்டது எனினும் அவர் விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற வேண்டும் என உடனடியாக பைபாஸ் சாலை வந்துவிட்டார் வந்த பின் விபத்தில் சிக்கியவரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் அவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் இதே போன்று அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்களையும் விட்டுவைக்காத வெறிநாய்கள் அவர்களையும் கடித்து குதறியது இதில் சுமார் 3 க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.. சிகிச்சை பெற்று வரும் பொதுமக்கள் கூறுகையில் வெறி நாய்கள் தொல்லை அதிகமாகிவிட்டது தினமும் நான்கு முதல் ஐந்து பேர் வரை கடி வாங்குகிறார்கள் எனவும் உடனடியாக மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் உடனடியாக நாய்களை பிடித்து வேறு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்