கீழக்கரையில் குற்ற செயல்களை கண்காணித்து கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு பகுதிகளில் CCTV…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் திருட்டு மற்றும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் நலன் கருதி கீழக்கரையின் பல செதுக்களில் இயங்கும் சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் அப்பகுதி மக்களின் பாதுகாப்புக்காக சி.சி.டிவி கேமரா பொருத்தி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக சமீபத்தில் தெற்கு தெரு முஸ்லிம் பொது நலசங்கம் சார்பில் சுமார் 4 சி.சி.டிவி பாதுகாப்பு கேமரா பொருத்தி தெரு பகுதிகளை கண்கானித்து வருகின்றனர். இதைபோல் சின்ன கடை தெரு பகுதியில் சுமார் 8 சி.சி.டிவி கேமராக்கள் மக்கள் ஊளியர் முஸ்லிம் சங்கம் சார்பில் வைக்கப்பட்டுள்ளது, அகமது தெரு பகுதியில் 4 சி.சி.டிவி கேமராக்கள் அஸ்வான் சங்கம் சார்பில் பொருத்தப்பட்டுள்ளது, மேலும் கிழக்குத் தெரு முஸ்லிம் ஜமாஅத் சார்பில் கிழக்குத் தெரு பகுதி முழுதும் சுமார் 32 சி.சி.டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது