தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி படுத்த வேண்டும் எஸ்.டி.டி.யூ தொழிற்சங்க மாநில செயலாளர் அப்துல் சிக்கந்தர். வேண்டுகோள்.

மதுரையில் பாண்டியன் உணவகம் முதல் ஊமச்சிகுளம் திருப்பாலை வழி செல்லும் பிரமாண்ட மேம்பாலம் கட்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களில் மூன்று பேரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இரண்டு நபர்கள் மிகவும் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனை சேர்க்கப்பட்டுள்ளனர்.உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவிப்பதோடு படுகாயமடைந்த தொழிலாளர்கள் விரைவில் பூரண நலம் பெற்று திரும்ப வேண்டியும்உயிரிழந்த தொழிலாளிக்குதமிழக அரசு, உரிய நிவாரணமாகரூபாய் ₹ 25 லட்சம் வழங்கிட வேண்டும் படுகாயமடைந்த தொழிலாளிக்கு முறையான மேல்சிகிச்சை அளித்து உரிய இழப்பீடும் வழங்கிடவேண்டும்.மேலும் நகர்புற மேம்பாட்டுதுறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறைபாலம் ஒப்பந்ததாரரிடம் முறையான விசாரணை மேற்கொள்வதோடுதொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி படுத்தவேண்டும் இவ்வாறு தனது அறிக்கையில் வேண்டுகோள்! விடுத்துள்ளார்:

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்