கொடைரோடு அருகே 700 கிலோ வெள்ளிப் பொருட்கள் கடத்தலா? போலீசார் விசாரணை.

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு டோல்கேட் அருகே  காவத்துறையினருடன்இணைந்துஅமலாக்த்துறையினருடன் அதிரடி சோதனையில் சேலத்திலிருந்து- மதுரைக்கு 6 கார்களில் கணக்கில் வராத  ரூ 2.5 கோடி மதிப்புள்ள சுமார் 700 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்சேலத்திலிருந்து-மதுரைக்கு கணக்கில் வராத வெள்ளி பொருட்களை கடத்தி வருவதாக மதுரை  அமலாக்கத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து   திண்டுக்கல் மதுரை சாலையில் உள்ள கொடைரோடு டோல்கேட் அருகே அம்மையநாயக்கனூர் காவல் ஆய்வாளர் சண்முகலெட்சுமி தலைமையிலான சுமார் 20-க்கும் மேற்பட்ட காவல்துறையினருடன் இணைந்து மதுரை வணிகவரி அமலாக்கத்துறை அதிகாரிகள் பாலமுருகன், ரசூலப்துல்லா தலைமையிலான 15- பேர் கொண்ட அமலாக்கத் துறையினர் மற்றும் வணிக வரித்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  அப்பொழுது சேலத்தில் இருந்து 6 -கார்கள் வரிசையாக வந்தது அந்த கார்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டபோது காரின் பின்பகுயில் மறைத்து வைத்து  வெள்ளி கொலுசு, வெள்ளி குத்து விளக்கு, குங்குமச்சிமிழ், வெள்ளி கட்டி, வெள்ளி டம்ளர் உட்பட சுமார் 700 கிலோ கணக்கில் வராத வெள்ளி பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர் மேலும் அவற்றை  காவல்துறையினர் உதவியுடன் பறிமுதல் செய்த அமலாக்கத் துறையினர் விசாரனை செய்து அரசுக்கு வரவேண்டிய சுமார்8-இலட்ச ரூபாய் வரியும் 8-இலட்ச ரூபாய் அபராதமும் விதித்தனர்  மேலும் இது தொடர்பாக  6-கார்களையும் காரில் வந்த ஆனந்தஅய்யர்70.செந்தில்பூபதி வயது40. சரவணன்36.பாரதிராஜா60. ஜீவானந்தம்54. பாலாஜி46. வெங்கடேசன்52. உட்பட 9-பேரின் செல்போன்களை பரத்துவைத்து விசாரணை நடத்தினர் மேலும் சுமார் 3 – மணிநேரத்தில் சுமார் 16 -இலட்ச ரூபாயையும் இணையம் மூலம் செலுத்திய பின் அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு பின்னர் விடுவித்தனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா