மானியத்தொகையினை உயர்த்தி வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு சங்கத்தினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுக்காவிற்குட்பட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு சங்கத்தினர் தங்களுக்கு வழங்கப்படும் அரசு மானியத் தொகையினை தரம்பிரித்து உயர்த்தி வழங்கப்பட வேண்டும் என கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து அவர்கள் திருப்பரங்குன்றம் தாசில்தாரிடம் மனு அளித்து அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.இது குறித்து செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவதுகொரோனா தொற்றின் காரணமாக ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் மேலும் அரசு வழங்கும் மானியத்தொகை போதைவில்லை எனவும் கூறிய அவர்கள்.நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வாக்குறுதியாக மற்றுத்திறனாளிக்கு மானியத்தொகையாக 1000 ருபாய் பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு 1500 ரூபாயும், 1500 ருபாய் பெறுபவர்களுக்கு 2000 ரூபாயுமாக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும்,மிகக்கடின மாற்றுத்திறனாளிகளுக்கு ருபாய் 5000 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும் கூறியதை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.தொடர்ந்து கூட்டத்தொடரில் வருகின்ற மானியக்கோரிக்கையில் தங்களது கோரிக்கைகளை பரிசீலனை செய்து தங்களுக்கு மானியத்தொகையினை உயர்த்தி வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..