செங்கம் பேரூராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு பேரணியை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ கிரி துவக்கி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் கொரோனா மூன்றாம் கட்ட அலை துவங்கும் என மருத்துவ வட்டாரங்கள் எச்சரித்துள்ள நிலையில் செங்கம் பேரூராட்சி செயல் அலுவலர் லோகநாதன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பேரணியில் கொரானா வில் இருந்து காத்துக்கொள்ள அரசு கூரிய விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி செங்கம் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை பேரணியாக சென்றனர்பின்னர் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டு தங்களது அடையாள அட்டைகளை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரியிடமிருந்து பெற்றுக் கொண்டனர் கொரோனா மூன்றாவது அலை மிக தீவிரமாக இருக்கக்கூடும் என்பதால் பொதுமக்கள் கூட்டமாக கூட வேண்டாம் எனவும் கட்டாயமாக முகக்கவசம் அணியவும் தேவையில்லாத இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டுமெனவும் நோயில்லாமல் வாழ அரசு சொல்லும் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டுமென இந்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இந்த விழிப்புணர்வு பேரணியில் சிறப்பு விருந்தினராக திருவண்ணாமலை மாவட்ட உதவி செயற்பொறியாளர் அம்சா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் இதில் நூற்றுக்கணக்கான பேரூராட்சி ஊழியர்கள் சாலையோர வியாபாரிகள் பொதுமக்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..