செங்கம் அருகே அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் இருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மண்மலை முறையாறு பாலம் அருகே பெங்களூர் பகுதியைச் சேர்ந்த விபுல்குப்தா மற்றும் அவரது மனைவி அருஷி ஆகியோர் வாடகை கார் மூலமாக பாண்டிச்சேரி சென்று மீண்டும் பெங்களூரு வந்துகொண்டிருந்தபோது முறையாறு பாலம் அருகே உள்ள சாலை வளைவை கடக்க முயன்ற அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்து அடியில் சிக்கிக் கொண்ட கார் சுமார் 100 மீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்றதில் ஓட்டுநர் உமேஜ் உட்பட மூவரும் காரில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர் அப்போது அங்கிருந்த பொதுமக்கள் காரில் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடியவர்களின் அலறல் சத்தத்தைக் கேட்டு மூவரையும் மீட்டு அவ்வழியாகச் சென்ற காரில் செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற விபுல்குப்தா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் அவரது மனைவி தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதால் அவரை மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர் காரை ஓட்டி வந்த உமேஜ் காலில் பலத்த காயம் ஏற்பட்டு செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் பாலம் வளைவுகள் இருக்கும் இடத்தில் தூரப்பார்வை தெரியாத அளவிற்கு கடை விளம்பர பேனர்கள் அதிக அளவில் வைத்துள்ளதால் இந்த விபத்திற்கு முக்கிய காரணமென அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் சாலை ஓரம் உள்ள விளம்பர பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் செங்கம் பகுதியில் காரும் அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது

புனித ரமலான் வாழ்த்துக்கள்..