நிலக்கோட்டை தொகுதி பெரியார் பிரதான கால்வாயில் புதிய கால்வாய் வெட்ட விவசாயிகளுடன் இணைந்து கவனயீர்ப்பு கருத்தரங்கம் .

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியில் உள்ள வீலிநாயக்கன்பட்டி, முசுவனூத்து, பிள்ளையார்நத்தம் , கூவனூத்து, சிலுக்குவார்பட்டி , எத்திலோடு, நூத்துலாபுரம், கோட்டூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் உள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும், நீண்ட நாள் திட்டமாக உள்ள தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வைகை அணையிலிருந்து பெரியாறு பிரதான கால்வாய் மூலமாக தேனி, திண்டுக்கல், மதுரை , ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தமிழகத்தில் முதலமைச்சராக இருந்த கர்மவீரர் காமராஜர் காலத்தில் புதிதாக சிமெண்ட் கால்வாய் அமைக்கப்பட்டு வருடம்தோறும் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.. அவ்வாறு அமைக்கப்பட்ட போது இந்தக் கால்வாயை ஒட்டி உள்ள நிலக்கோட்டை பகுதி விடுபட்டு விட்டது. இதன் காரணமாக நிலக்கோட்டை சுமார் பல ஆண்டுகளாக மழையும் சரிவர பெய்யாத காரணத்தால் வறண்ட பூமியாக மாறி வருகிறது. இதனை அறிந்த  விவசாயிகள் கடந்த பல ஆண்டுகளாக பெரியார் பிரதான  கால்வாயில் ஒரு புதிதாக கிளை வாய்க்கால் வெட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அந்த கால்வாய் மூலமாக இப்பகுதியிலுள்ள கண்மாய்களை நிரப்ப வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை அரசுக்கும் விடுத்த  வண்ணம் இருக்கிறார்கள். இருப்பினும் அரசு இத்திட்டத்தை பல்வேறு நேரத்தில் அதுவும் தேர்தல் நேரத்தில்  அரசியல்வாதிகள் வெறும் வாக்குறுதிகளாக கொடுத்துவிட்டு எந்தவிதமான முயற்சியும் ஏற்படுத்தவில்லை என்பது இப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் நிலக்கோட்டை பகுதியில் உள்ள விவசாயிகள் ஒன்றாக இணைந்து பெரியாறு பிரதான கால்வாய் நிலக்கோட்டை பகுதியில் புதிய கால்வாய் அமைப்பு சங்கத்தினரின்  கவனயீர்ப்பு கருத்தரங்க ஆலோசனை கூட்டம்  முசுவனூத்து அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளி வளாகத்தில்  நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பொறுப்பாளர் தனபாண்டி தலைமை தாங்கினார். முசுவனூத்து ஊராட்சி மன்ற தலைவர் ஜெயப்பிரகாஷ், பிள்ளையார் நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் முனிராஜா ஆகியோர்கள் முன்னிலை வகித்தார்கள். கூவனூத்து ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில் உள்ள வீலி நாயக்கன்பட்டி கிராம கண்மாய், முசுவனூத்து, கூ.குரும்பபட்டி, பிள்ளையார்நத்தம், எத்திலோடு, கொங்கப்பட்டி, கருத்தாண்டிபட்டி, சிலுக்குவார்பட்டி, குளத்துப்பட்டி பெரியகுளம் கண்மாய், சீத்தாபுரம் பாப்பன்குளம் கண்மாய், நிலக்கோட்டை கொங்கர் குளம் கண்மாய், உள்ளிட்ட நிலக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள அனைத்து மழைக்காலத்தில் கண்மாய்களை நிரப்ப தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணையில் இருந்து ஏற்கனவே அமைக்கப்பட்ட பெரியார் பிரதான கால்வாயில் நிலக்கோட்டை அருகே செல்லும் கால்வாயில் புதிய கால்வாய் வெட்ட வேண்டும் என்று  அரசுக்கு கவனயீர்ப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிலக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள அனைத்து விவசாய சங்கங்களும் , அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களும் , மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகளும் கட்சி வேறுபாடு இன்றி இணைந்து இந்தப் பணியைச் செய்ய கூட்டத்தில் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரசுக்கு உடனடியாக கொண்டு சேர்ப்பதற்காக ஒட்டு மொத்தமாக விவசாயிகள் கவனயீர்ப்பு கூட்டத்தில் கைதூக்கி ஒற்றுமையாக பாடுபடவேண்டும் என்று உறுதிமொழி  எடுத்துக்கொண்டனர். இக்கூட்டத்தில் சங்க நிர்வாகக்குழு பொறுப்பாளர்கள் சிவஞானசேகரன், பாலசுப்பிரமணியன், முருகன், ரவிச்சந்திரன், துரைப்பாண்டி, காசிமாயன், வீரமருதமணி, ரமேஷ், பிச்சை, சுப்பையா,  அல்லிமுத்து, போதுராஜன், ஸ்ரீதர், முரளி  உட்பட விவசாயிகள் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.படவிளக்கம் நிலக்கோட்டை அருகே முசுவனூத்து அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளி  வளாகத்தில் கருத்தரங்க கூட்டத்தில் விவசாயிகள் ஒற்றுமையாக கைதூக்கி கவனயீர்ப்பு தீர்மானத்தை உறுதி படுத்திய போது எடுத்துக் கொண்ட போது எடுத்த படம்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

புனித ரமலான் வாழ்த்துக்கள்..