பெண்களுக்கான கட்டணமில்லா பேரூந்தில் பெண்கள் அவமதிக்கப்படுகிறார்களா?? குமுறும் பெண்கள்..:

தமிழக அரசின் பெண்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட நகர்புற இலவச பேரூந்துகள் திட்டம் நடத்துனர்களால் கொச்சைப்படுத்தப்படுகிறதோ என்ற சந்தேகம் சமீபத்திய சம்பவங்கள் சந்தேகத்தை கிளப்புகிறது.

நேற்று (27.07.2021)மாலை இராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை வந்த TN63-1236 பதிவு எண் கொண்ட நகர்புற பேரூந்தில் கீழக்கரையை சேர்ந்த பெண்கள் ஏறி இருக்கையில் அமர்ந்துள்ளனர். அச்சமயம் அங்கு வந்த நடத்துனர் ஏம்மா….ஏறும் போதே டிக்கட் கேட்டு வாங்கனும்னு தெரியாதோ? செய்வது ஓசி பயணம்,இதுல உங்க இடத்தில் வந்து நாங்க டிக்கெட் கொடுக்கனுமோனு? அதட்டல் தொணியில் மரியாதையின்றி பெண்களிடம் பேசியுள்ளார்.

சட்டென கோபப்பட்ட பெண்கள், ஓசி பயணம் என்பதெல்லாம் அரசின் உத்தரவு. உங்களைப்போன்ற நடத்துனர்கள் அதனை கொச்சைப்படுத்துவதால் அரசுக்கு தான் அவப்பெயரை தேடி தருமென்று பதிலடி கொடுத்துள்ளனர்.

இன்னொரு நிறுத்தத்தில் பெண்கள் கைகளை அசைத்து பஸ்ஸை நிறுத்தி ஏறிய பொழுது, அவர்கள் ஏறும் முன்பே விசில் கொடுத்து பேரூந்தை நகன்றதால் ஓட்டுனரால் பெண்கள் தடுமாறியுள்ளனர்.

இராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை வந்து சேரும் வரை பெண் பயணிகளை ஒருவகையான வெறுப்பு கண்ணோட்டத்துடனேயே நடத்துனர் பார்த்து வந்துள்ளது அரசின் நல்ல திட்டத்தை மக்களிடம் வெறுப்புக்குள்ளாக்கி விட்டன.

கலெக்‌ஷன் கமிஷன் பாதிக்குதே என்னும் வயிற்றெரிச்சலை பெண் பயணிகளிடம் காண்பிக்கும் இதுபோன்ற நடத்துனர்கள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து கட்டணமில்லா இலவச பயண திட்டத்தை நல்வழிபடுத்த வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்கள் எதிர்பார்க்கின்றனர்?

புனித ரமலான் வாழ்த்துக்கள்..