பக்ரித் பண்டிகையை முன்னிட்டுபள்ளிவாசல்கள் நடைபெற்ற சிறப்பு தொழுகை.

தியாகத்திருநாள் என்னும் பக்ரித்பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாவட்டத்திற்குஉட்பட்ட மகபூப்பாளையம், நெல்பேட்டை, ஹாஜிமார்தெரு, கோரிப்பாளையம், சிலைமான், மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில்பக்ரித் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது.இந்த சிறப்பு தொழுகையில், பெண்கள், குழந்தைகள்உள்ளிட்ட எராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். தொழுகையின் முடிவில், இஸ்லாமிய பேச்சாளர்கள் பக்ரீத் பண்டிகையின் நடைமுறைகள் மற்றும் நன்மைகள் குறித்து எடுத்துரைத்தனர்.இதனைத் தொடர்ந்து, இறைவனுக்காக தங்களின் கடமையை நிறைவேற்றும்வகையில் ஆடுகளை அறுத்து அதன் இறைச்சிகளை ஏழை எளிய மக்களுக்குவழங்கி தியாகத்திருநாள் கடமையை நிறைவேற்றினர்.கொரோனா ஊரடங்கு காரணமாக திடல்களில் தொழுகை நடத்த அனுமதி இல்லாத நிலையில், பள்ளிவாசல்களில் கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி தொழுகையை நடத்தினர்.பக்ரித் பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய பின் இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் தங்களதுவாழ்த்துக்களைதெரிவித்துகொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & Get Delivered