மீனாட்சியம்மன் கோவில் ஆடி முளைக்கொட்டு திருவிழாவின் 9 ஆம் நாள் நிகழ்வாக புஷ்ப பல்லக்கில் அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலத்தில் எழுந்தருளிய மீனாட்சியம்மன்:

உலகபிரசிதிபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சிறப்பு வாய்ந்த ஆடிமுளைக்கொட்டு திருவிழா கடந்த 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் நாள்தோறும் அம்மனுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு தினசரி மாலையில் அம்மன் சிம்மவாகனம், அன்ன வாகனம், கமாதேனு வாகனம், யானை வாகனம் , கிளி வாகனம் என பல்வேறு வாகனங்களில் எழந்தருளிய நிலையில் 9-ஆம் நாளாக மீனாட்சி அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலத்தில், புஷ்ப பல்லக்கில் ஆடி வீதியில் எழுந்தருளினார்.மல்லிகை, ரோஜா உள்ளிட்ட பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மன் எழுந்தருளிய நிலையில் பல்வேறு ஆராதனைகள் நடத்தப்பட்டது. கோவிலில் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படும் நிலையில், விழாக்கள் மற்றும் வீதி உலா நிகழ்வுகள் கோவில் உட்பிகாரத்திலயே நடைபெற்றுவருவதால் விழாக்களின் போது, பக்தர் காண அனுமதி இல்லை.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & Get Delivered