திமுக ஆட்சி.கலசப்பாக்கம் பகுதியில் திமுக தொண்டர் அன்னதானம் வழங்கி நேர்த்திக்கடன்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி புதுப்பாளையம் அடுத்த படி அக்ரகாரம் கிராமத்தில் திமுக தொண்டர் உண்மை விசுவாசமான ஜோதி திமுக வெற்றி பெற வேண்டும், கலசப்பாக்கம் சட்டமன்ற வேட்பாளர் சரவணன் வெற்றி பெற வேண்டும் என வேண்டிக்கொண்டு, புதூர் மாரியம்மன் கோயிலில் அம்மனுக்குநேர்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டிக் கொண்டு 1008 தேங்காய் உடைத்தும் அன்னதானம் வழங்கியும் காணிக்கை செலுத்தினர்.திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்தது கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் வெற்றி பெற்றதையடுத்துஇதன் காரணமாக, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் முன்னிலையில் புதூர் மாரியம்மன் திருக்கோயிலில் 300 தேங்காய் உடைத்தும் ஊர் மக்களுக்கு அன்னதானம் வழங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.அதன்பின், கோயிலுக்கு சாமியை வணங்கிவிட்டு, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் ஊர் மக்களுக்கு நன்றி செலுத்தினார். இந்நிகழ்ச்சியின் முன்னதாக படி அக்ரஹாரம் கிராமத்தில் திமுக கட்சி சார்பில் கொடியேற்று விழா சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் சுந்தரபாண்டியன் மற்றும் மாவட்ட கவுன்சிலர் மனோகரன் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் , இளங்கோவன் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் மோகன் , கூட்டணி கட்சியினர், திமுக கட்சி மாவட்ட ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர் கொண்டனார்

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & Get Delivered