செங்கம் அருகே பனைமரம் கருவேல மரங்களை வெட்டி நில ஆக்கிரமிப்பு; மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியம் அந்தனூர் ஊராட்சி துரிஞ்சாபுரம் அருகிலுள்ள கொங்குனேரி ஏரி சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியில் ஊராட்சிக்குட்பட்ட நான்கு கிணறுகள் உள்ளன. பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிணறுகள் மூலமாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது. மேலும் இந்த ஏரிக்கு கீழ் 50 ற்கும் மேற்பட்ட விவசாய கிணறு உள்ளது. ஊராட்சிக்கு சொந்தமான 70 பனைமரம் 100 மேற்பட்ட சீமை கருவேல மரங்கள் உள்ளன. இதில் 10 க்கும் மேற்பட்ட சீமைகருவேல மரங்களை வேரோடு சாய்த்தும் பனைமரங்களை வெட்டியும் செங்கல் சூளைகளின் எரிபொருள் தேவைக்காக தமிழ்நாட்டின் மாநில மரமான பனைகளை வெட்டி அழிக்கும் செயல் தடையின்றி நடந்து வருகிறது. இந்நிலையில் ஏரியில் அமைந்துள்ள காய்த்துத் தொங்கிய பனைமரத்தை வெட்டி பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் ஏரியின் வழிப்பாதையில் இறைச்சிக்காக ஆட்டின் தலையை வெட்டி வைப்பது போல் பனைமரத்தின் காய்களுடன் மேல்பகுதியை வைத்து எச்சரிக்கை செய்யும் விதமாக பனைமரத்தின் அடிப்பாகத்தை தீயிட்டும் கொளுத்தியுள்ளனர். மேலும் துரிஞ்சாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மணியின் மகன் ரவி, ரவி மகன் சண்முகம் ஆகியோர் ஜேசிபி இயந்திரம் மூலம் வேரோடு சாய்த்து சுமார் 1 ஏக்கர் அளவிற்கு நீர்நிலை நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இயற்கை வளங்களை அழிப்பதோடு புதியதாக வெட்டப்பட்ட கிணற்றிலிருந்து எடுக்கப்பட்ட கற்களைக் கொண்டுவந்து ஏரியில் கொட்டியுள்ளனர். எனவே துரிஞ்சாபுரம் கிராம மக்கள் சார்பாக சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும், செங்கம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு பனை மற்றும் கருவேலன் மரத்தை வெட்டிய நபர்கள் இது போன்று அரசு நீர்தேக்க நிலங்கள் ஆக்கிரமிப்பு அதில் உள்ள மரங்களை வெட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடாதவாறு தகுந்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..