கோரோனா தொற்று முற்றிலும் ஒழியவும், உலக நன்மை வேண்டியும் பழமுதிர்சோலை முருகன் கோவிலில் 108 கலசங்கள் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது..

மதுரை மாவட்டம் மேலூர் அருகே முருகனின் ஆறாவது படைவீடாக கருதக்கூடிய அழகர்கோயில் பழமுதிர்சோலை முருகன் கோவிலில், ஆனிமாத விசாக நட்சத்திரத்தையொட்டி சோலைமலை மண்டபத்தில் 108 கலசங்கள் வைத்து சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்றது, அப்போது உலக நன்மை வேண்டியும், கொரோனா தொற்று முற்றிலும் ஒழிய வேண்டியும், சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்க 108 கலசங்களுக்கும் பூஜைகள் செய்து வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிசேக ஆராதனை செய்யப்பட்டது, இதனைத் தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு புஷ்பத்தால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை பூஜைகள் நடைபெற்றது,கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் அனுமதியின்றி சிவாசாரியர்கள், கோவில் நிர்வாக அதிகாரி அனிதா, தக்கர் வெங்கடாசலம் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் மட்டும் இப்பூஜையில் கலந்துக் கொண்டனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & Get Delivered