நகை தொழிலை நம்பி வாழும் நகை பட்டறை தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து வறுமையில் வாடும் அவல நிலை

இராஜபாளையம் நகர் பகுதியில் கொரோனா தொற்றையடுத்து தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு விதிமுறையால் நகை தொழிலாளிகள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும். 150க்கும் மேற்பட்ட நகை பட்டறை தொழிலாளர்கள் .நகை பட்டறையை திறக்க தமிழக அரசுக்கு கோரிக்கை.விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அம்பலபுளி பஜார் சுப்பிரமணியசாமி கோவில் தெரு மற்றும் காமாட்சி அம்மன் கோவில் தெரு என இரண்டு பகுதிகளிலும் சுமார் 150 க்கும் மேற்பட்ட நகை பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன இந்த தொழிலை நம்பி சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் வாழ்க்கை நடத்தி வருகின்றனர் இந்த நிலையில் தமிழக அரசு ஊரடங்கு விதைத்து 45 நாட்கள் மேல் ஆகிவிட்ட நிலையில்.ஒரு சில கடைகள் திறப்பதற்கு தமிழக அரசு தடை அனுதி அளித்துள்ளது இருப்பினும் நகைக்கடைகள் திறப்பதற்கு அனுமதி அளிக்கவில்லை நகை கடை திறந்தால் தான் நகை பட்டறையில் வேலைகள் நடைபெறும் ஆனால் நகை பட்டறையில் பழுது நீக்குவது பழைய பொருட்களை சரிசெய்வது வெள்ளி பொருட்களுக்கு முலாம் பூசுவது போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்றும் .

இந்த நகை பட்டறைகள் திறக்காததால் இதை நம்பி வாழ்க்கை நடத்தி வரும் தொழிலாளிகள் வாழ்வாதாரம் இழந்து வறுமையில் வாடி வருகின்றனர் ஆகையால் தமிழக அரசு நகைப் பட்டறைகள் திருப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நகைத் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.ஏற்கனவே நகைகள் அனைத்தும் ரெடிமேடாக நகை கடையில் விற்பனைக்கு வந்துவிட்ட நிலையில் அதை செய்யும் தொழிலாளிகள் மிகுந்த வருத்தத்தில் வேலையில்லாமல் உள்ளனர் இந்த நிலையில் நகைப் பட்டறைகளை திறக்க முடியாத சூழ்நிலை காரணமாக அவர்கள் முற்றிலுமாக வாழ்வாதாரம் இழந்து வறுமையில் வாடி வருவதால் தமிழகஅரசும் தமிழக முதல்வர் கவனத்தில் கொண்டு இவர்களுக்கு உதவி செய்ய முன் வர வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்..

செய்தியாளர் வி காளமேகம்

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & Get Delivered