Home செய்திகள் கீழை நியூஸ் செய்தி எதிரொலி. கர்ப்பிணிப் பெண்களை தரையில் அமர வைத்தது தொடர்பாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவமனை ஊழியர்களுக்கு எச்சரிக்கை.

கீழை நியூஸ் செய்தி எதிரொலி. கர்ப்பிணிப் பெண்களை தரையில் அமர வைத்தது தொடர்பாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவமனை ஊழியர்களுக்கு எச்சரிக்கை.

by mohan

மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான ஆரம்ப சுகாதார நிலையம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள பைகாரா பகுதி முத்துராமலிங்கபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கே பழங்காநத்தம் மற்றும் பைகாரா பகுதியில் வசிக்கக்கூடிய கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். அவர்களை தரையில் அமர வைத்து இன்னலுக்கு ஆளாகி வருவதாக நேற்று புகார் எழுந்தது.மேலும், தரையில் உட்கார்ந்து இருக்கும்பொழுது மிகவும் சிரமமாக உள்ளதால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.கர்ப்பிணிப் பெண்களை தரையில் அமர வைத்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், 70 ஆண்டுகளுக்கும் மேல் செயல்பட்டு வந்த பழங்காநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தை செயல்படுத்த வேண்டும். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட மாநகராட்சி சுகாதார அதிகாரி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலரும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக கீழை நியூஸ் சத்திய பாதை மாத இதழ் இணையதள செய்திகள் செய்தியாக வெளியிட்டு இருந்தார்கள் செய்தியின் எதிரொலியாக

இது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகு நகர்ப்புற சுகாதார ஆய்வாளர் குமரகுருபரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,நேற்று நடந்தது தொடர்பாக மருத்துவமனையில் பணியாற்றி ஊழியரிடம் விசாரணை மேற்கொண்டோம். மேலும், இதுபோன்ற தவறுகளை திரும்பவும் நடைபெறாமல் இருக்க வேண்டும். மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணி பெண்களுக்கு நேரம் ஒதுக்கப்பட வேண்டும் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர் ஜோதிபாசு கூறுகையில்;

70 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த பழங்காநத்தம் மகப்பேறு மருத்துவமனையில் நிரந்தரமாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியமர்த்தினால் பழங்காநத்தம் பகுதி கர்ப்பிணி பெண்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.மாதம் ஒருமுறை மருத்துவ செக்கப் மற்றும் இரத்த பரிசோதனைகள் தடுப்பூசி இவை அனைத்திற்கும் பழங்காநத்தம் பகுதி கர்ப்பிணி பெண்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பைக்கரா மகப்பேறு மருத்துவமனை செல்கின்றனர். 3 கிலோமீட்டர் தொலைவில் கர்ப்பிணி பெண்கள் வெயில் மற்றும் மழை காலங்களில் மிகவும் சிரமமாக உள்ளது.தற்போது செயல்படாமல் உள்ள பழங்காநத்தம் மகப்பேறு மருத்துவமனை நிரந்தரமாக செயல்படுத்தினால் இப்பகுதி மக்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என சமூக ஆர்வலர்.. தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!