சமூகவலைதளங்களில் போலியான கணக்குகள் மூலம் 15க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி பாலியல் தொந்தரவு – காவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவலரின் மனைவி காவல் ஆணையர் அலுவலகத்தில் கண்ணீர்மல்க புகார்.

மதுரை ரிசர்வ்லைன் காவலர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம் – பழனியம்மாள் என்பவரது மகனாகிய முத்துசங்கு என்பவர் தமிழ்நாடு காவல்துறையில் காவலராக பணிபெற்ற நிலையில் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணனின் அரசு இல்லத்தில் பாதுகாவலராக பணிபுரிந்துவந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காவலர் முத்துசங்கு க்கும் மதுரை டி.ஆர்.ஓ காலனி பகுதியை சேர்ந்த பி.இ.பட்டதாரி பெண்ணான சுபாஷினி என்பவருக்கு திருமணமாகியுள்ளது.திருமண நிச்சயத்தின் போது உதவி ஆய்வாளராக பணிபுரிவதாக கூறியநிலையில் திருமணத்திற்கு பின் காவலராக பணிபுரிவதாக தெரியவந்த நிலையில் மனைவி சுபாஷினி கணவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.இதையடுத்து திருமணத்தின் போது போடப்பட்ட 25பவுன் தங்க நகையை தருமாறு பெற்று கணவர் அடகுவைத்துள்ளார். இதையடுத்து கணவர் முத்துசங்கு தினசரி செல்போனை பயன்படுத்திகொண்டே இருந்துள்ளார்.இதனால் சந்தேகமடைந்த மனைவி அவரது செல்போனை எடுத்து பார்த்தபோது பேஸ்புக் மெசஞ்சரில் 15க்கும் மேற்பட்ட பெண்களிடம் போலியான ஐடிகளை பயன்படுத்தி ஆபாசமாக பேசியுள்ளதையும், ஆபாசமான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.இது குறித்து கணவரிடம் கேட்டபோது மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார்.இதையடுத்து தல்லாகுளம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் காவலர் மீது நடவடிக்கை எடுக்காமல் முன்னாள் அமைச்சர் கருப்பணன் அலுவலகத்தில் பணிபுரிவதால் நடவடிக்கை எடுக்கமுடியவில்லை என கூறி காவலர்கள் பதில் அளித்துள்ளதாகவும், இதையடுத்து கணவரின் பெற்றோரிடம் கூறியபோதும் கண்டுகொள்ளாத நிலையில் மீண்டும் புகார் அளிக்க சென்றபோது தான் திருந்தி் வாழ்வதாக கூறி காவல்நிலையத்தில் எழுதிகொடுத்துள்ளார்.இதனை நம்பி மனைவி சுபாஷினி கணவருடன் சென்று வாழ்ந்துவந்த நிலையில் வரதட்சனை குறைவாக கொண்டுவந்ததாகவும் கூறியதோடு கட்டாய பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.மேலும் தொடர்ச்சியாக செல்போனில் சமூகவலைதளங்களில் ஆபாசமாக பேசிவந்ததை கண்டுபிடித்து அதனை ஆதாரமாக எடுத்துள்ளார். அந்த பதிவுகளில் திருமணமான மற்றும் இளம்பெண் 15க்கும் மேற்பட்டோரிடம் தான் காவல்துறை உயரதிகாரி என கூறி ஆபாசமாக பேசியதோடு அந்த பெண்களின் அந்தரங்க புகைப்படங்களை பெற்றுகொண்டு அதனைவைத்து மிரட்டி பல்வேறு இடங்களுக்கு அழைத்துசென்று தகாத உறவில் ஈடுபட்டுவந்துள்ளதும் மெசஞ்சர் முலமான உரையாடலை பார்த்து கண்டுபிடித்துள்ளார். அதில் சில பெண்கள் தன்னை விட்டுவிடுமாறு கூறி கேட்ட நிலையிலும் தன்னுடன் பழகியதை கணவரிடம் கூறிவிடுவேன் என மிரட்டி பணம். பெற்றுள்ளதையும் ஆதாரத்துடன் கண்டுபிடித்துள்ளார்.இந்நிலையில் கணவரின் ஆபாச செயல் குறித்து சில தினங்களுக்கு முன்பு கண்டுபிடித்த மனைவி சுபாஷினி இன்று மதுரை மாநகர காவல் ஆணையரிடம் தனது பெற்றோருடன் வந்து புகார் மனு அளித்தார்.அந்த மனுவில் தனது கணவர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து வரதட்சணை கொடுமை செய்ததோடு, பல பெண்களுக்கு சமூகவலைதளங்களில் மூலம் ஏமாற்றி பாலியல் மிரட்டலில் ஈடுபட்டுள்ளதாகவும் தனது வாழ்க்கை போனாலும் பரவாயில்லை தன் கணவரை நம்பி ஏமாந்த இளம்பெண்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சுபாஷினி :தன் கணவர் காவலர் என்பதை தவறாக பயன்படுத்தி பெண்களை சமுகவலைதளங்கள் மூலமாக ஏமாற்றி பாலியல் தொந்தரவு அளிப்பதாகவும், அவர் மீது புகார் அளித்தபோது முன்னாள் அமைச்சர் கேசி கருப்பணனின் பெயரை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், தனது கணவரை கைது செய்து அவரது செல்போனை பறிமுதல் செய்து சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தினால் பல்வேறு பெண்களின் வாழ்க்கை காப்பற்றபடும் என தெரிவித்தார்.காவலர் ஒருவரே போலியான சமுகவலைதள கணக்குகள் மூலமாக ஏராளமான பெண்களை ஏமாற்றிவருவதாக மனைவியே ஆதாரத்துடன் அளித்த புகாரானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & Get Delivered