இளையான்குடி அருகே குடிபோதையில், மனைவியை தவறாக பேசிய தந்தை வெட்டிக் கொலை.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சிறுபாலை கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மதுபழக்கம் உடைய கணேசன் தினமும் குடித்துவிட்டு வந்து தனது மனைவி மற்றும் மருமகளுடன் தகாத வார்த்தைகள் பேசி சண்டையிடுவது வழக்கம் என கூறப்படுகிறது. இந்நிலையில் மதுபோதையில் நள்ளிரவில் வந்த கனேசன் தனது மூத்த மகனின் மனைவியை தவறாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகன்கள் பழனிச்சாமி தனது சகோதரன் கார்த்திகை சாமி மற்றும் தாய் செல்வி துணையுடன் கணேசனை அரிவாளால் வெட்டியதில் கணேசன் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து சம்பவ இடம் வந்த இளையான்குடி காவல் நிலையத்தினர், உடலை மீட்டு இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். பின்பு கொலை செய்துவிட்டு தப்பியோடியவர்களை போலீஸார் தேடி வந்த நிலையில், கொலை செய்த இரு மகன்கள் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த தாய் செல்வி ஆகியோரை போலீசார் இன்று கைது செய்தனர். மதுபோதைக்கு அடிமையான தந்தை தனது மனைவி மற்றும் மகன்களால் கொலையுண்ட சம்பவம் அப்பகுதி மக்களை வேதனையடைய செய்துள்ளது.

செய்தியாளர் வி காளமேகம்

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & Get Delivered