சிறுவனின் சிறுநீரக சிகிச்சைக்கு 25 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கிய அன்பு அறக்கட்டளை.

மயிலாடுதுறை கூறைநாடு பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஜெயக்குமார் என்பவரது 8 வயது மகன் சாய்சரனுக்கு ஒருபகுதி சிறுநீரகம் செயல் இழந்த நிலையில், மற்றொறு சீறுநீரகத்துக்கு தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

மேற்கொண்டு அவர்களால் பணம் செலவு செய்ய முடியாமல் சிறுவனை வீட்டிற்கு அழைத்துவந்து மகன் குறித்த கவலையில் ஆழ்ந்திருந்த அந்த குடும்பத்தினரின் கண்ணீர் கதையை கேட்டு, பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய அந்த மாணவனுக்கு உதவும் வகையில் மயிலாடுதுறை அன்பு அறக்கட்டளை நிறுவனரும் மூத்த பத்திரிகையாளருமானகொ.அன்புகுமார் தனது அன்பு அறக்கட்டளை மூலம் சம்மந்தப்பட்ட மாணவனுக்கு ரூபாய் 25 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார். மேலும் சிகிச்சைக்கு தேவைப்படும் உதவிகளை செய்து தருமாறு அந்த மாணவனுக்கு சிகிச்சையளித்த மருத்துவர் சாத்தப்பனிடம் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் ஊடகவியலாளர் கொ.அன்புகுமார். இந்த நிகழ்வில் அன்பு அறக்கட்டளையின் நிர்வாகிகள் முனைவர் நடராஜன், அன்புராஜா,கார்த்திக், பிரபு ஆகியோர் உடனிருந்தனர்

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & Get Delivered