“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் கீழக்கரையிலிருந்து அளிக்கப்பட்ட மனுவுக்கு நடவடிக்கை..

2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக ஒவ்வொரு தொகுதிக்கும் செல்லும்போது “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்னும் திட்டத்தை தொடங்கி அதன் அடிப்படையில் பொதுமக்களிடம் பல மனுக்களை பெற்றார். அப்போது அவர் கூறுகையில், “திமுக அரசு பதவியேற்றவுடன் 100 நாட்களில் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்படும்” என்று உறுதியும் அளித்தார்.

பின்பு தேர்தல் முடிவு வந்தவுடன் திமுக ஆட்சி அமைந்து. முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட மு க ஸ்டாலின் உங்கள் தொகுதியில் முதல்வர் என்னும் திட்டத்தை அறிவித்து உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்னும் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களை தனி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மூலம் மனுக்கள் விசாரணை நடைபெற்று மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சேர்ந்த முகம்மது ஹாஜா சுஐபு கீழக்கரைக்கு அரசு நடுநிலைப்பள்ளி வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதன் தொடர்ச்சியாக முகம்மது ஹாஜா சுஐபுவை அதிகாரிகள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இன்று (23/06/2021) அதை விசாரணை செய்வதற்காக மாவட்ட கல்வி அதிகாரி தங்கம் கனிமொழி தலைமையில் கீழக்கரை மறவர் தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கலந்தாய்வு நடைபெற்றது.

அப்போது கீழக்கரை நகராட்சிக்கு சொந்தமான முகம்மது காசியப்ப தர்கா எதிரில் உள்ள இடத்தில் அரசுப் பள்ளி கட்ட கோரிக்கை விடுத்தனர். அதன் தொடர்ச்சியாக இதைப்பற்றி உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அப்பொழுது கீழக்கரை தி.மு.க நகர் கழக செயலாளர் பசீர் அகமத், இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான், நகர் துணைச் செயலாளர் ஜமால் பாரூக், வர்த்தக அணி அமைப்பாளர் மக்கள் டீம் காதர் ஆகியோர் உடனிருந்தனர்.

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & Get Delivered