உசிலம்பட்டியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி 82வது ஆண்டு துவக்க விழா

உசிலம்பட்டியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் துவங்கப்பட்டு 82 ஆவது ஆண்டுவிழாவில் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலையில் பார்வர்ட் பிளாக் கட்சி மாநில பொதுச்செயலாளர் பி.வி‌. கதிரவன் தலைமையில் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மற்றும் பி.கே.மூக்கையா தேவர் சிலைக்கு மாலை அணிவித்து பின்னர் சுபாஷ் சந்திர போஸ் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

 பின்னர் பொது மக்கள் கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இவ்விழாவில் மாநிலச் செயலாளர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட செயலாளர் ஐ. ராஜா, கிழக்கு மாவட்ட செயலாளர் மோகன், மேற்கு மாவட்ட செயலாளர்கள்  பால்பாண்டி, ஆதிசேடன், மாவட்ட தலைவர் ஆர். பாண்டி, செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய துணைச் சேர்மன் மணிகண்டன், மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர்  ரெட் காசி, பி.ஆர்.சி. கண்ணன், குணசேகரன் முத்துப்பாண்டி, நகரச் செயலாளர் ஆச்சி ராசா, சவுந்தரபாண்டி, சபரி, எவரெஸ்ட் பால்சாமி, தொண்டரணி, தவசி, மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்களும் கலந்து கொண்டனர்

உசிலை சிந்தனியா

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & Get Delivered