செல்போன் டவர் மீது ஏறி பெண் போராட்டம்; செங்கோட்டையில் பரபரப்பு..

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் செல்போன் கோபுரம் மீது ஏறி பெண் ஒருவர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புளியரை தாட்கோ நகரைச் சேர்ந்தவர் பிரான்சிஸ். இவரது மகள் அபிதா (24). இவர், நேற்று மாலையில் செங்கோட்டை அரசு மருத்துவமனை அருகே உள்ள செல்போன் டவர் மீது ஏறி நின்று கொண்டு கீழே குதிக்கப் போவதாக கூறினார்.இந்நிலையில் அந்த பெண்ணிடம் தென்காசி டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் மற்றும் தீயணைப்பு படையினர் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது, தனது தந்தையை புளியரை காவல் நிலைய போலீஸார் தாக்கியதாகவும், போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடன் பேசி உறுதிமொழி அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். நீண்ட நேரம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும், இரவு வரை அவர் கீழே இறங்கி வரவில்லை. இறுதியில் மாவட்ட எஸ்.பி. கிருஷ்ணராஜ் அவரை சமாதானப்படுத்தி கீழே இறங்கச் செய்தாா்.இந்த சம்பவத்தால் தென்காசி செங்கோட்டை பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & Get Delivered