வெண்மணி ஊராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த வெண்மணி ஊராட்சியில் பணியாற்றியவரும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் டேங்க் ஆப்பரேட்டர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் தலைமையில் போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தூய்மைப் பணியாளர் களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.தூய்மை பணியாளர்களுக்கும் டேங்க் ஆபரேட்டர்களுக்கும் 25 கிலோ சிற்பம் அரிசி மற்றும் காய்கறி வகைகள் எண்ணெய் பருப்பு போன்ற தொகுப்பினை கொண்ட உணவுப் பொருட்கள் 20 நபர்களுக்கு போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சட்டமன்ற உறுப்பினராக எனக்கு வாக்களித்து தேர்வு செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் கொரோனா நோயையும் பொருட்படுத்தாமல் தங்கள் தூய்மைப் பணியை தொடர்ந்து செய்து வருவதற்கு நன்றி தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் சேத்துப்பட்டு மேற்கு ஒன்றிய செயலாளர் ராகவன், சேத்துப்பட்டு மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் வள்ளி மணி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் செந்தில் மற்றும் பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Hala’s New Look With Authentic Taste

Hala’s New Look With Authentic Taste

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image

Be the first to comment

Leave a Reply