செங்கம் அருகே உள்ள இறையூர் வனப்பகுதியில் காணாமல் போனவரை எலும்புக்கூடாக மீட்ட காவல் துறை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தானத்கவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவர் விவசாயம் தொழில் செய்து வந்தார் இவர் குடும்ப தகராறு காரணமாக கடந்த 9 மாதத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் இதனையடுத்து அவரது மனைவி உறவினர்கள் வீட்டில் தேடி அலைந்தபோது அவர் கிடைக்காததால் பாய்ச்சல் காவல் நிலையத்தில் தனது கணவர் குடும்ப பிரச்சனையால் யாரிடமும் சொல்லாமல் எங்கேயோ சென்று விட்டார் எனவும் அவரை மீட்டு தரும்படி புகார் கொடுத்திருந்தார் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு தேடிவந்தனர் ஆனால் அவரைப் பற்றி எந்தவித தகவலும் காவல்துறையினருக்கு கிடைக்காததால் அவரை தேடும் முயற்சியை காவல்துறையினர் கைவிட்டனர் இந்நிலையில் இறையூர் வனப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு நபர் மலை அடியில் உள்ள ஒரு பாறையின் சந்தில் மனித எலும்புக்கூடு இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஆடு மேய்ப்பவர் அப்பகுதி வனக்காப்பாளர் கோவிந்தராஜ் க்கு தொலைபேசி மூலம் தகவலை தெரிவித்துள்ளார்

இதனடிப்படையில் அங்கு சென்ற வனக்காப்பாளர் பாய்ச்சல் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார் தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் சரவணகுமரன் மற்றும் காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் தலைமையிலான காவல்துறையினர் நேரில் சென்று இறந்து போன நபர் காணாமல் போன காமராஜ் ஆக இருக்கலாம் என எண்ணி அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர் அங்கு வந்த அவரது உறவினர்கள் அவர் அணிந்திருந்த ஆடைகளை வைத்து இறந்து போனது காமராஜ் என உறுதி செய்தனர் இறந்துபோன காமராஜ் உடலின் அருகே மதுபாட்டில் பூச்சி மருந்து பாட்டில் தண்ணீர் கேன் இருந்ததை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர் இதையடுத்து பாச்சல் காவல்துறையினர் பூச்சி மருந்து பாட்டில் மற்றும் செருப்பினை வைத்து அந்த நபர் தற்கொலை செய்து கொண்டிருப்பார் என உறுதி படுத்தினார் இதையடுத்து திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தகவல் கொடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை நிபுணர் டாக்டர் கமலகண்ணன் அவருக்கு தகவல் அளித்து சம்பவ இடத்திற்கு விரைந்த பிரேத பரிசோதனை நிபுணர் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை மேற்கொண்டார் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் எலும்புக்கூடாக உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது காணாமல் போன கணவரை கண்டுபிடித்து தரும்படி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு இருந்த நிலையில் சுமார் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு எலும்புக்கூடாக போலீசார் ஒப்படுத்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது

Hala’s New Look With Authentic Taste

Hala’s New Look With Authentic Taste

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image

Be the first to comment

Leave a Reply