இராஜபாளையத்தில் அரசு உத்தரவை மீறி செயல்பட்ட ஜவுளிக்கடை சூப்பர் மார்க்கெட்டுக்கு சீல் வைப்பு

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் பகுதியில் கடந்த 2 நாட்களாக தமிழக அரசு அறிவித்த தின் பெயரில் பலசரக்கு கடைகள் பழக்கடைகள் கடைகள் மற்றும் இறைச்சி கடைகள் செயல்பட அனுமதித்தத நிலையில் ஜவுளிக்கடை செருப்பு கடை மற்றும் சூப்பர் மார்க்கெட் இதுபோன்ற கடைகள் திறந்து செயல்பட்டு வந்ததால் நேற்று இராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரன். காவல்துறை துணை கண்காணிப்பாளர்நாகசங்கர் தலைமையில் நேற்று எச்சரிக்கை விடுத்தனர்.இருப்பினும் இதை கண்டு கொள்ளாமல் இன்று கடைகள் திறந்து வியாபாரத்தில் ஈடுபட்ட இராஜபாளையம் நகர் பகுதியில் ஐந்து ஜவுளிக்கடை மூன்று சூப்பர் மார்க்கெட் என பல்வேறு கடைகளுக்கு சீல் வைத்தனர்.மேலும் நகராட்சி நிர்வாகம் சார்பில் சார்பில் 30க்கு மேற்பட்ட கடைகளுக்கு 500 முதல் 1000 வரை அவதாரமும் விதிக்கப்பட்டுள்ளது அவதாரம் விதிக்கப்பட்ட கடைகள் மீண்டும் திறந்தால் அந்த கடைகளில் வைத்து மாவட்ட ஆட்சியரிடம் சாவிகள் ஒப்படைக்கப்படும் என எச்சரித்து சென்றனர் .அரசு உத்தரவை மீறி செயல்படுவது நோய்த்தொற்று அபாயத்தை உருவாக்கும் ஆகையால் பொதுமக்களும் வியாபாரிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது..

செய்தியாளர் வி காளமேகம்

Hala’s New Look With Authentic Taste

Hala’s New Look With Authentic Taste

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image

Be the first to comment

Leave a Reply