தென்காசியில் தடையை மீறி பேரணி; பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பினர் 1159 பேர் கைது..

தென்காசியில் தடையை மீறி பேரணி செல்ல முற்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் 1159 பேர் கைது செய்யப்பட்டனர். தென்காசி பகுதியில் “மக்களாட்சியை பாதுகாப்போம்” என்ற முழக்கத்தோடு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு ஒற்றுமை அணிவகுப்பு பேரணி நடத்த ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இந்த நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர் லுக்மான் ஹக்கீம் தலைமையில், பாப்புலர் ஃப்ரண்ட் அமைப் சீருடை உறுப்பினர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேற்று மாலை தென்காசி கொடிமரம் பகுதியில் ஒன்று கூடி பேரணி செல்ல முயன்ற 1159 பேர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் முஹம்மது அலி ஜின்னா, பாப்புலர் ஃப்ரண்டின் மாநில பொதுச் செயலாளர் முகைதீன் அப்துல் காதர், எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன், பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயலாளர் நாகூர் மீரான், பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் செய்யது இப்ராகிம் உஸ்மானி, கேம்பஸ் ஃப்ரண்ட் மாநில தலைவர் அசரப், பாப்புலர் ஃப்ரண்ட் நெல்லை மண்டல தலைவர் திப்பு சுல்தான், ஆல் இந்தியா இமாம் கவுன்சில் மாநில செயற்குழு உறுப்பினர் சவுக்கத் அலி உஸ்மானி, எஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர் யாசர் கான், பிஎப்ஐ மாவட்ட செயலாளர் அப்துல் பாசித் மற்றும் தென்காசி ஜமாத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..