மதுரை திருநகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள காப்பகத்தில் இருந்த முதியவர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட திருநகர் பகுதியில் உள்ள தமிழக நல வாழ்வு மையத்தில் மதுரை மாநகராட்சி மற்றும் ஸ்வீடு டிரஸ்ட் என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனம் இணைந்து வீடற்ற ஏழைகள் மற்றும் முதியோர் தங்கும் இல்லாம் நடத்தி வந்தனர்.இங்கு ஆதரவற்றவர்கள், ஏழைகள் மற்றும் குடும்பத்தினரால் கைவிடப்பட்ட முதியவர்கள் என 20 பேர் தங்கியுள்ளனர். இந்தநிலையில் கடந்த மாதம் மதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த சூழ்நிலையில், காப்பகத்தில் இருந்த ஒரு சிலருக்கு கொரானா தொற்றுக்கான அறிகுறி இருந்த நிலையில் காப்பகத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கடந்த 3 நாட்களில் 5 முதியோர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. கொரோனா தொற்று பாதித்தவர்களை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் காப்பகம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு தெளிக்கப்பட்டு அப்பகுதிக்கு யாரும் அனுமதி இல்லாமல் வரவேண்டாம் எனவும் காப்பகத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Hala’s New Look With Authentic Taste

Hala’s New Look With Authentic Taste

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image

Be the first to comment

Leave a Reply