மதுரையில் ஊரடங்கை மீறி சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 நபர்கள் கைது

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் தீவிரமாக இருந்துவரும் நிலையில், தமிழக அரசு சார்பில் தரவுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது, இதனையடுத்து மதுரை மாடக்குளம் பகுதியைச் சேர்ந்த இரண்டு முதியவர்கள் மற்றும் சில இளைஞர்கள் கும்பலாக முககவசங்கள் இன்றியும், சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனை அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மதுரை எஸ்எஸ் காலனி போலீசார் சட்டம் ஒழுங்கு தனிப்படை காவலர்கள் அவர்களை சம்பவ இடத்தில் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட கணேசன் (வயது 58), சூரன் (வயது 68), முத்தையா(வயது 36), மாரிமுத்து(வயது 30) ஆகிய நால்வர் மீது பேரிடர் கால நிலையில் அரசின் உத்தரவை மீறியதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Hala’s New Look With Authentic Taste

Hala’s New Look With Authentic Taste

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image

Be the first to comment

Leave a Reply