தொடர்ந்து ரயில் மூலம் கடத்திக் கொண்டு வரப்படும் வெளிமாநில மதுபாட்டில்கள்430 பறிமுதல் – இருவர் கைது

மதுரை ரயில் நிலையத்தில் உள்ள பார்சல் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற அதிரடி சந்தேகப்படும்படி ஒரு பார்சல் இருந்தது இதைப் பார்த்தபோது சோதனையில் 68 ஆயிரத்து 760 லிட்டர் கொள்ளளவு உள்ள 430 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை.கரோனா பொது முடக்கத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் மதுக் கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரயில்கள் மூலம் வெளிமாநில மது பாட்டில்கள் சட்டவிரோதமாக கொண்டு வரப்படுகின்றன என குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து ரயில்வே போலீசார் தீவிர அசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன் தொடர்ச்சியாக மதுரை ரயில் நிலையத்தில் உள்ள பார்சல் அலுவலகத்தில் இன்று சோதனை மேற்கொண்டபோது 68 ஆயிரத்து 760 லிட்டர் கொள்ளளவு கொண்ட 430 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த அருண்குமார் (33), ஆண்டாள்புரத்தை சேர்ந்த சந்திரசேகரன் (33) ஆகிய இருவர் ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டு, மதுரை மாநகர மதுவிலக்கு காவல்துறை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ஊரடங்கு காலத்தில் ரயில் மூலம் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 732 மது பாட்டில்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் கொள்ளளவு 215.550 லிட்டர் ஆகும். இந்த சட்டவிரோத கடத்தல் தொடர்பாக இதுவரை 20 நபர்கள் மீது மதுரை ரயில்வே போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை ரயில்வே காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவார்கள் சந்தேகப்படும் யாரேனும் இருந்தால் அவர்களது உடமைகளை சோதனை செய்து தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் மது பாட்டில்கள் இருந்தால் இது போன்ற செயல்கள் மேலும் தொடருமானால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை ரயில்வே போலீஸ் அறிவித்துள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Hala’s New Look With Authentic Taste

Hala’s New Look With Authentic Taste

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image

Be the first to comment

Leave a Reply