உசிலம்பட்டி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டிப்போட்டு 11பவுன் நகையை பறித்த சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேக்கிழார்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் அழகர் மனைவி முனியம்மாள் (70). இவரது கணவர் அழகர் இறந்துவிட்ட நிலையில் முனியம்மாள் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் முனியம்மாள் வழக்கம்போல் வீட்டு வாசல் முன்பு தனியாக இருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த பெண் ஒருவர் வங்கியில் இருந்து வருவதாகவும், உங்களுக்கு கடிதம் வந்துள்ளதாகவும் கூறி கடிதத்தில் கையொழுத்திடுமாறு தெரிவித்தார்.

இதனால் மூதாட்டி வீட்டிற்குள் கையெழுத்துப்போடு பேனாவை எடுக்க சென்றார். இந்த சமயத்தை பயன்படுத்தி அந்த பெண் மூதாட்டியை வீட்டிற்குள் கட்டிப்போட்டு அவரது கழுத்தில் அணிந்திருந்த 11பவுன் தங்க செயினை பறித்துகொண்டு அங்கிருந்து தப்பியோடினார்.டிமூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உசிலம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியிடம் விசாரணை நடத்தினர்

Hala’s New Look With Authentic Taste

Hala’s New Look With Authentic Taste

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image