இராஜபாளையம் அரசு மருத்துவமனை கொரோணா வார்டில் சிறப்பு கண்காணிப்பு அதிகாரி திடீர் ஆய்வு.

இராஜபாளையம் பகுதியில் நாளுக்கு நாள் கொரோணா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் 160 படுக்கைகள் அமைக்கப்பட்டு கொரோணா பாதித்த நபருக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோணா சிறப்பு கண்காணிப்பு அதிகாரி தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்குனர் தீபக் ஜேக்கப் ராஜபாளையம் அரசு மருத்துமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கொரோணா பாதித்தவர்களுக்கான சிகிச்சை குறித்த விவரமும், மேலும் ஆக்சிஜன் அமைப்புகள் குறித்தும் மருத்துவ அலுவலர் மற்றும் மருத்துவர்கள்தான் கேட்டறிந்து ஆய்வு செய்தார். இந்நிலையில் இந்த மருத்துவமனையில் 40 படுக்கைகள் ஆக்சிஜனுடன் தயாராக உள்ளது எனவும், சமூக ஆர்வலர் அமைப்பின் மூலம் வழங்கப்பட்ட 13ஆக்ஸிஜன் செறிவூட்டி தயராக உள்ளதாக தெரிவித்தனர். ஆய்வின் போது மருத்துவ அலுவலர் பாபுஜி மற்றும் சுகாதார துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..