கொடைரோடு அருகே மின்சாரம் தாக்கி மாடு பலி

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 15-வது வார்டு  பொம்மனம்பட்டியின் விநாயகர் கோவில் எதிர்ப்புறம் உள்ள கடந்தாண்டு உதய் மின்திட்டம் மூலம் புதிதாக அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்ம் எதிரே உள்ள தரிசு நிலத்தில்  காலை அதே ஊரைச் சேர்ந்த நல்லூ என்பவர் மூன்று பசு மாடுகளை மேய்சலுக்காக பிடித்து சென்றுள்ளார் .அப்போது நிறைமாத பசுமாடு டிரான்ஸ்பார்ம் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக திடீரென மின்சாரம் பாய்ந்து துள்ளி துடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதனைக்கண்ட மேலும் இரண்டு மாடுகளும் நல்லுவும் சிதறி ஓடினர். இதனால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.உடனடியாக அப்பகுதி வயர்மேனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் கடந்த மூன்று நாட்களாக இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில்  காலை மேய்ச்சலுக்காக சென்ற பசுமாடு உரிய மாதாந்திர பராமரிப்பும் பாதுகாப்பு வேலியும் இல்லாத டிரான்ஸ்பார்ம் அருகே சென்றதால்தான் மின்சாரம் தாக்கி நிறைமாத பசுமாடு பலியாகியுள்ளது. மேலும்  டிரான்ஸ்ஃபார்மை சுற்றி முறையான பாதுகாப்பு வேலியும் மாதாந்திர பராமரிப்பு பணியும் செய்யப்படாதது மட்டுமின்றி உயர் அழுத்த மின்சாரம் செல்லும் பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்கப்படாததும் இதற்கு காரணம் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்மேலும் இதேபோன்று அதே ஊரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகே புதிதாக டிரான்ஸ்பார்மர் பராமரிப்பின்றி பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாகவும் பெரும் விபத்து ஏற்படும் முன் இது போன்ற டிரான்ஸ்பார்மை சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்து அபாய எச்சரிக்கை பலகை வைத்து உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Hala’s New Look With Authentic Taste

Hala’s New Look With Authentic Taste

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image