நெல்லை பொதிகைத் தமிழ்ச் சங்கம் சார்பில் இணையவழி வாழ்த்துக் கவியரங்கம்..

தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் மு.க.ஸ்டாலின் அவர்களை பாராட்டும் விதமாக பொதிகை தமிழ்ச்சங்கம் சார்பில் வாழ்த்துக் கவியரங்கம் 07.05.2021 வெள்ளிக் கிழமை மாலையில் இணைய வழியில் நடைபெற்றது. இந்த கவியரங்கிற்கு கவிஞர் பேரா தலைமை தாங்கினார். கலைமாமணி கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி, (சென்னை) தொடக்கவுரை வழங்கி கவியரங்கினைத் தொடங்கி வைத்தார். தொடக்கக் கவிதையை கவிஞர் பேரா வாசித்தார். தொடர்ந்து தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத் துறைப் பேராசிரியர் முனைவர் ஜெ.தேவி, திருச்செங்கோடு விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி தமிழ் உயராய்வுத் துறைத் தலைவர் முனைவர் ம.கவிதா,மதுரை கவிஞர் இரா.இரவி ,கவிஞர் பாப்பாக்குடி அ.முருகன், அருப்புக்கோட்டை கவிஞர் இரா.துளசிராமன் ஆகியோர் கவியரங்கில் கலந்து கொண்டு வாழ்த்துக் கவிதை வாசித்தார்கள். நிகழ்ச்சியில் கவிஞர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் பலர் இணைந்திருந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் பேரா செய்திருந்தார்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

Hala’s New Look With Authentic Taste

Hala’s New Look With Authentic Taste

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image