செங்கத்தில் பகுதிநேர ஊரடங்கு மீறிய கடைகள் மற்றும் உணவகங்களில் சுகாதாரத்துறையினர் அபராதம்

தமிழகத்தில் வேகமாக பதவி வரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைைய மேற்கொண்டு வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு அங்குள்ளவர்களுக்கு கொரொனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து செங்கம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் முதல், கூடுதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை மட்டுமே மளிகை, காய்கறி, டீக்கடைகள் திறந்து இருந்தன.முன்னதாக மக்கள் காய்கறி மார்க்கெட், மளிகைப் பொருட்கள் வாங்க கடைகளில் குவிந்தனர். மதியம் 12 மணி வரை செங்கம் நகர பகுதியில் மக்கள் நடமாட்டம் வழக்கம் போல் காணப்பட்டது. போலீசார் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் ரோந்து சென்றனர்.மதியம் 12 மணியளவில் அடைக்கப்படாத கடைகள் மற்றும் ஹோட்டல்களில் சுகாதார துறையினர் மற்றும் காவல்துறையினர் மூடப்படாத கடைகளில் அபராதம் விதித்தனர் உடனே அடைக்க வேண்டும் என எச்சரித்தனர். மதியம் கடைகள் மூடப்பட்டதால் மாலைக்குமேல் மக்கள் நடமாட்டம் குறைந்து செங்கம் நகரம் வெறிச்சோடி காணப்பட்டது.வழக்கம்போல் பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் குறைந்த எண்ணிக்கையில் பயணிகள் வந்தனர். பெரும்பாலான பஸ்கள் குறைந்த அளவிலான பயணிகளுடன் சென்றன. ஊரடங்கால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது

புனித ரமலான் வாழ்த்துக்கள்..