செங்கம் பகுதியில மதுபான விற்பனை நேரம் குறைக்கப்பட்டதால் கள்ளச்சாராயம் விற்பனை அமோகம்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்து வரும் நிலையில் ஒரு பகுதியாக அரசு மதுபான கடை நேரம் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை குறைக்கப்பட்டதால் கள்ளச்சாராய வியாபாரிகள் இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அதிக அளவில் கள்ளச்சாராயம் காய்ச்சி வருகின்றனர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியியை சுற்றியுள்ள ஆனைமங்கலம் பிஞ்சூர் பொரசப்பட்டு தீர்த்தாண்டப்பட்டு தோக்கவாடி ஆகிய பகுதிகளில் உள்ள ஏரி குளம் வனப்பகுதிகளில் அதிக அளவில் கள்ள சாராய ஊறல் பேரல்களை பதுக்கி வைத்து பகல் மற்றும் இரவு நேரங்களில் அதனை காய்ச்சி பல்வேறு கிராமங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கின்றனர் இதன் விலை லிட்டருக்கு சுமார் 1,000 முதல் 1,200 வரை விற்கப்பட்டு வருகிறது செங்கம் காவல் நிலையத்திற்கு சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இதுபோன்ற கள்ளச்சாராயம் காய்ச்சுவது செங்கம் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது மதுப் பிரியர்கள் அரசு மதுபான கடைகளில் மதியம் 12 மணிக்கு மேல் மது பாட்டில்கள் கிடைக்காததால் கள்ளச் சாராயம் குடிப்பதற்காக கிராமங்கள்தோறும் படையெடுத்து வருவதாகவும் இதனால் உயிர் சேதம் ஏற்படும் முன்பு திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் செங்கம் பகுதியில் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களையும் இதனை காய்ச்சி கொடுப்பவர்களையும் கண்டறிந்து உயிரிழப்புகள் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென செங்கம் பகுதி சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்

Hala’s New Look With Authentic Taste

Hala’s New Look With Authentic Taste

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image