மதுரை விமான நிலையத்தில் 4 விமானங்கள் மூலம் 8 சேவைகள் வழங்கப்பட உள்ளதாக விமானநிலைய அதிகாரிகள் அறிவிப்பு.

தமிழகத்தில் கொரானா இரண்டாவது அலை தொற்று பாதிப்பினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில்  நண்பகல் 12 மணி முதல் இந்த புதிய ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கடந்த வாரம் 7 விமானங்கள் மூலம் 14 சேவைகள் வழங்கிய நிலையில் தற்போது இன்று  4 விமானங்கள் மூலம் 8 சேவைகள் வழங்கப்பட உள்ளதாக விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று இண்டிக்கோ மற்றும் ஏர்இந்தியா நிறுவனங்கள் மட்டுமே தலா 2 விமானங்கள் வீதம் 4 விமானங்கள் மூலம் சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு தங்களது சேவையை வழங்கப்பட உள்ளதாக அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளது மேலும் கடந்த ஒருவார காலமாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மதுரை விமான நிலையத்திற்கு தங்களது சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..